4வது நாளாக இணைய தாக்குதலுக்கு உள்ளான நியூசிலாந்து பங்கு சந்தை
நியூசிலாந்து பங்கு சந்தை 4வது நாளாக தொடர்ந்து இணைய தாக்குதலுக்கு உள்ளான நிலையில், தகவல் தொடர்பு பாதுகாப்பு பணியகத்தின் உதவியை நாடி உள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் கிராண்ட் ராபர்ட்சன் தெரிவித்தார்.
சைபர் தாக்குதலால் இணைப்பு சிக்கல்கள் ஏற்பட்டு என்ஜெக்ஸ் லிமிடெட் பங்கு சந்தை நெட்வொர்க்குகள் செயலிழந்தன.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் கிராண்ட் ராபர்ட்சன், இணைய தாக்குதல்களை தீவிரமாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
50 லட்சம் மக்கள் தொகையுடன் சிறிய பொருளாதாரம் கொண்ட நியூசிலாந்தில் இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அண்டை நாடான ஆஸ்திரேலியாவும் தனது இணைய பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
Comments