திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டலப் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
திருமூர்த்தி அணையில் இருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டலத்துக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதை தொடர்ந்து கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஆகியோர் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டனர்.
இதன்மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments