கொரோனா காலகட்டத்தில் NEET, JEE தேர்வுகளை நடத்தக்கூடாது, 6 மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
கொரோனா காலகட்டத்தில் நீட் மற்றும் JEE தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக மேற்கு வங்கம், பஞ்சாப்,மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 6 மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளன.
கடந்த ஜூன் மாதம் நடக்க வேண்டிய இந்த தேர்வுகளை கொரோனா தொற்று காரணமாக அடுத்த மாதம் நடத்தலாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 17 ஆம் தேதி அனுமதி வழங்கியது.
இதனிடையே, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா நடத்திய 7 மாநில முதலமைச்சர்களின் காணொலி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 6 மாநிலங்கள் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி அதில் சேர்ந்து கொள்ளவில்லை.
Ministers from 6 States- West Bengal, Jharkhand, Rajasthan, Chhattisgarh, Punjab & Maharashtra file review petition in the Supreme Court seeking review of August 17 order of the Court and postponement of #JEE_NEET scheduled to be held in September. pic.twitter.com/G3GXYufrkY
— ANI (@ANI) August 28, 2020
Comments