JEE தேர்வுக்கு 10 லட்சம் முகக்கவசங்கள், கையுறைகளை ஏற்பாடு செய்ய திட்டம்

0 1595
ஜேஇஇ தேர்வெழுதும் மாணவர்களுக்காக 10 லட்சம் முகக்கவசங்கள், கையுறைகளைத் தயார் செய்து வைக்கத் தேசியத் தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.

ஜேஇஇ தேர்வெழுதும் மாணவர்களுக்காக 10 லட்சம் முகக்கவசங்கள், கையுறைகளைத் தயார் செய்து வைக்கத் தேசியத் தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.

செப்டம்பர் 1 முதல் 6 வரை ஜேஇஇ தேர்வையும், 13ஆம் தேதி நீட் தேர்வையும் நடத்தத் தேசியத் தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. ஜேஇஇ தேர்வெழுத 8 லட்சத்து 58 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தேர்வு நடைபெறும் 660 மையங்களில் கண்காணிப்புப் பணியில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்நிலையில் தேர்வு மையங்களுக்கு வழங்க 10 லட்சம் முகக்கவசங்கள், கையுறைகள், ஆறாயிரத்து அறுநூறு லிட்டர் கிருமிநாசினி ஆகியவற்றைத் தேசியத் தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காகக் கூடுதலாக 13 கோடி ரூபாயைச் செலவிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments