5 ரபேல் போர் விமானங்கள் செப்.10ம் தேதி இந்திய விமானப்படையில் சேர்ப்பு

0 1880

பிரான்சால் அண்மையில் வழங்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் செப்டம்பர் மாதம் 10ம் தேதி சேர்த்து கொள்ளப்படவுள்ளன.

36 ரபேல் விமானங்களில் முதல்கட்டமாக அளிக்கப்பட்ட 5 விமானங்கள் ஹரியானா மாநிலம் அம்பாலா விமான படைதளத்தை ஜூலை 29ம் தேதி வந்தடைந்தன. அந்த விமானங்கள், இந்திய விமானப்படையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் சேர்க்கப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சிக்கு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு இந்திய விமானப்படையின் 17ஆவது கோல்டன் அரோஸ் படைப்பிரிவின் அங்கமாக (17 Golden Arrows squadron of the Air Force) 5 ரபேல் விமானங்களும் திகழும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments