ஜோ பிடனின் திட்டம் 'மேட் இன் சீனா'; தமது திட்டம் 'மேட் இன் அமெரிக்கா' - அதிபர் டிரம்ப்
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனின் திட்டம் என்பது மேட் இன் சீனா என்றும் தமது திட்டம் மேட் இன் அமெரிக்கா என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டதை ஏற்று நிகழ்த்திய உரையில், ஜோ பிடன் அதிபராக வந்தால் அமெரிக்காவின் கனவுகளை தகர்த்து விடுவார் எனவும் அவர் கூறினார்.
தாம் மீண்டும் பதவிக்கு வந்தால், அமெரிக்காவில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை வழங்குவதை உறுதி செய்வேன் எனவும் அவர் உறுதி அளித்தார்.
Comments