தன் கையை தானே வெட்டிய ex.ராணுவ வீரர்.. கம்பத்தில் பகீர்..!

0 36114

தேனி மாவட்டம் கம்பம் அருகே முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கறிக்கடையில் இறைச்சி வெட்டும் கத்தியால் தன் கையை வைத்து தானே வெட்டி கொண்ட பதைபதைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கைகளில் பிளேடால் கீறி ரத்தம் வெளியேறினாலே மயங்கி உயிரிழப்பு நேரிட வாய்ப்புள்ள நிலையில் கை மணிக்கட்டை துண்டாக வெட்டிய பிறகும் முன்னாள் ராணுவ வீரர் இருசக்கர வாகனத்தில் எவ்வித சிரமமும் இன்றி சென்றதுடன் போலீஸ்காரரிடம் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த வீடியோவும் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வெங்கடேசன் குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து அதே பகுதியில் தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் கம்பம் பேருந்து நிலையத்தில் அருகே உள்ள கோழி இறைச்சி கடைக்குவந்த வெங்கடேசன் கடைக்கு முன் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு இறைச்சிக் கடைக்குள் சென்றார்.

மதிய நேரம் என்பதால் கடையில் கூட்டம் இல்லாத நிலையில் கடைக்குள் நுழைந்த வெங்கடேசன் கோழி இறைச்சி வெட்டும் இடத்திற்குச் சென்று, இறைச்சி வெட்டும் கட்டையில் தனது இடது கையை வைத்து வலது கையில் வெட்டுக் கத்தியை எடுத்து மணிக்கட்டை நான்கைந்து முறை வெட்டினார்.

வெட்டிய வேகத்தில் மணிகட்டோடு கை துண்டாக இரத்தம் பீரிட்டு வெளியேறியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கடையிலிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். அவர்களை மீண்டும் அழைத்த வெங்கடேசன், தனது வலது கையை வெட்டுக் கட்டையில் வைத்து அதனை வெட்டுமாறு சைகை காட்டினார்.

அவர்கள் யாரும் வராத நிலையில், துண்டான கையை கடையிலேயே விட்டு விட்டு வெங்கடேசன் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து சாலையில் நின்றிருந்த வெங்கடேசனை பிடித்து, விசாரித்தனர். அப்போது யாரோ சிலர் தனது ஒவ்வொறு உடல்பாகங்களை வெட்டிக்கொள்ளுமாறு கூறியதாகவும், தற்போது தனது இரு கைகளை வெட்டிக்கொள்ளுமாறு கூறியதால் ஒரு கையை தானே வெட்டிக் கொண்டதாகக் கூறி பதைபதைக்க வைத்தார்.

அதிர்ந்து போன போலீசார், வெங்கடேசனை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து, பின்னர் துண்டான கையை குளிர் பெட்டியில் வைத்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் உடல்நிலை மோசமடைந்த வெங்கடேசன் அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குளிர்சாதனபெட்டியில் இருந்த துண்டான பாகத்தை நீண்ட நேரம் போராடி மருத்துவர்கள் வெங்கடேசனின் கையில் பொருத்தினர். தற்போது வெங்கடேசன் நினைவுக்கு வந்து பேசி வரும் நிலையில், அடுத்தகட்ட நகர்வு குறித்து மருத்துவகுழுவினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY