விமானத்தில் வைஃபை பயன்படுத்த விதிமுறை..!
விமானங்களில் வைஃபை பயன்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை விமானப் போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதில் விமானங்கள் மூவாயிரம் அடி உயரத்துக்கு மேல் பறக்கும்போது தான் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
செல்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை பிளைட் மோடில் தான் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் தொடர்பான கருத்துரைகளை முப்பது நாட்களுக்குள் அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
Comments