பூமியில் இருந்து செவ்வாய் கிரகம் சென்றாலும் அழியாத பாக்டீரியாக்கள்
பூமியில் இருக்கும் சில வகை நுண்கிருமிகள் விண்ணிலும் அழியாமல் இருக்கக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அவை செவ்வாய்க்கிரகம் வரை கொண்டு செல்லப்பட்டாலும் அழியாமல் நீடித்து இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. கோனன் என்று அழைக்கப்படும் ஒருவகை பாக்டீரியா, அலுமினிய தகடுகள் மீது வைக்கப்பட்டு விண்வெளி ஆய்வு மையத்தின் வெளியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு வெளியே இருக்கும் கதிர்வீச்சு மற்றும் சூழலியல் இடர்களைக் கடந்து பாக்டீரியா கிருமிகள் மூன்று ஆண்டுகளாக அழியாமல் இருப்பதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காற்று இல்லாத நிலை, ஈரப்பதமற்ற நிலை, அமிலங்கள் போன்ற எதையும் சமாளித்து இந்த வகை பாக்டீரியாக்கள் நீடித்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதீதமான கதிர்வீச்சையும் இவை வென்று விடுவதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
Comments