கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? : ஆக. 29 - ல் முடிவு

0 5955
தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதியோடு முடிவடையும் கொரோனா கால ஊரடங்கு, மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து, வரும் 29 - ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ வல்லுநர்களுடனும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதியோடு முடிவடையும் கொரோனா கால ஊரடங்கு, மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து, வரும் 29 - ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ வல்லுநர்களுடனும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டமாக பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், மாலையில் நாகை மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊரடங்கு நீட்டிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என மீண்டும் விளக்கம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை நடத்த வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதை சுட்டிக்காட்டினார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் ரெடிமேட் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என கூறிய அவர், இதன் மூலம் 21 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதி அளித்தார். நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறை மாவட்டம் விரைவில் உதயமாகும் என்றார்.

முன்னதாக கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, யார், எங்கு செல்கிறார்கள் ? என தெரிந்து கொள்ள இ - பாஸ் முறை கட்டாயம் அவசியம் என திட்டவட்டமாக தெரிவித்தார். கல்லூரி மாணவர்கள் அனைவரையும் அரியர் பேப்பரில் பாஸ் என அறிவித்தது வாக்கு வங்கிக்காக அல்ல என கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவர் களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

காலையில், கடலூர் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், 32 கோடியே16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY