திண்டுக்கலை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய தகவல் பரிமாற்ற செயலி

0 8358
திண்டுக்கலை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய தகவல் பரிமாற்ற செயலி

வாட்ஸ் அப் செயலியை விட அதிக வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய தகவல் பரிமாற்ற செயலியை திண்டுக்கலை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் உருவாக்கி அசத்தியுள்ளான்.

மாணவன் உருவாக்கிய செயலிக்கு கூகுள் நிறுவனம் ஒப்புதல் அளித்து பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது.

தாமரைப்பாடி பகுதியை சேர்ந்த பிரனேஷ் என்ற மாணவன் ஊரடங்கை பயனுள்ளதாக்கும் விதமாக கூகுள் நிறுவனம் நடத்தும் கோடிங் கிளாஸில் ஆன்லைன் மூலம் பயின்று வந்துள்ளார்.

அதன் மூலம் மாணவர் பிரனேஷ் ஜெட் லைவ் சாட் என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளார்.

நாம் அனுப்பும் தகவலை அறிமுகமில்லாத நபர் யாரும் பார்க்க முடியாத வகையிலும், பதிவிறக்கம் செய்ய முடியாத வகையிலும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு தகவலை ஒரே நேரத்தில் பதினைந்து பேருக்கு ஷேர் செய்யலாம். வாட்ஸ் அப்- ஐ போன்று ஆடியோ, வீடியோ கால் மூலமும் உரையாடலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments