என்சிசி மாணவர்களுக்கான டிஜிட்டல் பயிற்சி செயலி அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார்
என்சிசி மாணவர்களுக்கான பயிற்சி செயலி ஒன்றை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார்.
கொரானாவால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், என்சிசி மாணவர்களுக்கான பயிற்சிகளும் தடைபட்டுள்ளன.
பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்படும் வாய்ப்புகளும் இல்லை என கூறப்படுவதால், நாடு முழுதும் உள்ள என்சிசி மாணவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
செயலியை துவக்கி வைத்த ராஜ்நாத் சிங், என்சிசி மாணவர்களுடன் காணோலியில் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கொரோனா ஒழிப்பில் முன்களப் பணியாளர்களுக்கு உதவும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான என்சிசி மாணவர்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.
Launched the Directorate General National Cadet Corps (DGNCC) Mobile Training App today. This App will assist in conducting countrywide online training of the NCC cadets. pic.twitter.com/cYqm7xBZm4
— Rajnath Singh (@rajnathsingh) August 27, 2020
Comments