மாநிலங்களுக்கு ரூ 1.65 கோடி ஜிஎஸ்டி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது - நிர்மலா சீத்தாராமன்
ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான துணைவரி வசூல் 95 ஆயிரத்து 444 கோடியாக இருந்தாலும், 2020 நிதியாண்டில், மாநிலங்களுக்கு மத்திய அரசு 1.65 லட்சம் கோடியை இழப்பீட்டுத் தொகையாக வழங்கி உள்ளது என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தின் பின்னணியில், தங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குமாறு மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அதில் இதனை தெரிவித்த நிர்மலா சீத்தாராமன், நடப்பு நிதியாண்டில், கொரோனா காரணமாக ஜிஎஸ்டி வசூலில் 2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த நிலையில், மாநில அரசுகள் தங்களது வரி வருவாய் இழப்பை ஈடு செய்ய இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து 97,000 கோடி ரூபாயை நியாயமான வட்டி விகிதத்தில் வழங்க மாநிலங்களுக்கு ஒரு சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும்.
இந்தக் கடன் தொகையை செஸ் வருவாயிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அரசுகள் திருப்பிச் செலுத்தலாம்.
இல்லையென்றால், இந்த ஆண்டு ரூ.2.35 லட்சம் ஜி.எஸ்.டி இழப்பீட்டு வேறுபாட்டை ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து மாநிலங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
Repayment of loans, including interest payments, will be made through the cess collected from 6th year onwards. In no case, states will be burdened i.e they will not have to tap into other sources of revenue for loan repayment: Revenue Secretary on GST compensation to states https://t.co/Bkbx20ZxRS
— ANI (@ANI) August 27, 2020
Comments