நாடு முழுதும் முகரம் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க இயலாது உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
நாடு முழுதும் முகரம் ஊர்வலங்களை நடத்த அனுமதி வழங்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது.
ஷியா பிரிவை சேர்ந்த செய்யது கல்பே ஜாவத் எனபவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வு, இதற்கான அனுமதியை வழங்கினால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதை பலிகடாவாக மாற்றும் நிலை ஏற்படும் என கூறியது.
இப்படி ஒரு அனுமதியை வழங்கி, அந்த ஊர்வலத்தில் செல்பவர்களால் கொரோனா பரவியது என கூறும் நிலை ஏற்பட வேண்டுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நாடு முழுமைக்குமான பொது உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும் மனுதாரர் விரும்பினால் லக்னோ உயர் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவித்தனர்.
Comments