வான்வெளியின் கண்கள் என வர்ணிக்கப்படும் ஃபால்கன் ராடார் விமானங்களை வாங்குகிறது இந்தியா
வான்வெளியின் கண்கள் என வர்ணிக்கப்படும் ஃபால்கன் (Phalcon) ராடார் பொருத்தப்பட்ட விமானங்களை, 1 பில்லியன் டாலர் மதிப்பில் இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்க உள்ளது.
ராடார் அமைப்பு பொருத்தப்பட்ட இந்த விமானங்கள், நவீன போர் முறைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
எல்லைக்குள் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் போன்றவற்றை, தரைநிலையத்தில் உள்ள ரேடார்கள் கண்டறிவதற்கு முன்னரே இந்த ராடார் விமானங்கள் கண்டறிந்து விடும்.
இந்த ரகத்தை சேர்ந்த ராடார் விமானங்களை 8 முதல் 10 என்ற எண்ணிக்கையில் பாகிஸ்தான் வைத்துள்ளது. சீனா 30-க்கும் அதிகமான எண்ணிக்கையில் வைத்துள்ளது.
இந்தியா தற்போது 3 ஃபால்கன் விமானங்களை மட்டுமே வைத்துள்ளது.
இதில், Ilyushin76 எனப்படும் ரஷ்ய கனரக விமானங்களில், இஸ்ரேலின் ஃபால்கன் ராடார் முறை பொருத்தப்பட்டிருக்கும். அந்த வகையில், இஸ்ரேலிடமிருந்து மேலும் 2 ஃபால்கன் ராடார் விமானங்களை வாங்கும் திட்டம்,
அதிக விலை காரணமாக ஏற்கெனவே 2 முறை தள்ளிப்போனது. லடாக் விவகாரத்தை தொடர்ந்து தற்போது இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments