வட இந்திய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

0 3368
வட இந்திய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வட இந்திய மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு தீவிர கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளுக்கு ஆரஞ்சு வண்ண எச்சரிக்கையும், அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் வண்ண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் நாளை 28ம் தேதியன்று உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதிகளுக்கும், 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராஜஸ்தானின் கிழக்கு பகுதிகளுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மேற்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments