160 ஆண்டுகளில் இல்லாத புயல்... லூசியானா மாநிலத்தை புரட்டி எடுத்த லாரா
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் லாரா புயல் தாக்கியுள்ளது.
கேம்ரான் என்ற இடத்தின் அருகே அந்த புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 150 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்தன.
கடந்த 160 ஆண்டுகளில் இது போன்ற ஒரு புயல் அப்பகுதியை தாக்கியதில்லை என்று கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பவர்கள் ஹோட்டல் அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். லேக் சால்ஸ் பகுதியில் இருப்பவர்கள் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் 2 லட்சத்து 70 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.
‘Extremely dangerous’ Hurricane Laura makes landfall in Louisiana with winds gusting at 240kmphhttps://t.co/ZNe9I96CFd
— ThePrintIndia (@ThePrintIndia) August 27, 2020
Comments