அணு ஆராய்ச்சி சோதனை நடந்த இடங்களை பார்வையிட அணுசக்தி ஆய்வாளர்களுக்கு ஈரான் அனுமதி
ஈரானில் ஆணு ஆயுத சோதனைகள் நடந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு இடங்களை பார்வையிட சர்வதேச அணுசக்தி கழக ஆய்வாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச அணுசக்தி கழக தலைமை இயக்குநர் ரபேல் குரோசி (Rafael Grossi) டெஹ்ரான் சென்று ஈரான் அணு சக்தி அமைப்பின் தலைவர் அலி அக்பர் சலேஹியுடன் (Ali Akbar Salehi) நடத்திய ஆலோசனையின் விளைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015க்கு முன்னர் ஈரான் நடத்தியதாக கூறப்படும் அணு ஆராய்ச்சி பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அந்த நாடு முறையான பதிலை அளிக்கவில்லை என சர்வதேச அணுசக்தி கழகம் குற்றம் சாட்டி வரும் நிலையில் ஈரான் இப்போது அது குறித்த சோதனைக்கு ஒப்புக் கொண்டுள்ளது.
Comments