பிரேசிலில் கொரோனா பாதிப்பை அமேசான் காட்டுத்தீ மேலும் தீவிரப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
பிரேசிலில் அமேசான் காட்டுத்தீயால் காற்று மாசு அதிகரித்து கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அந்நாட்டில் இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் கடந்த ஆண்டை போல அதே எண்ணிக்கையில் அமேசானில் தீ விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் காடுகள் அழிப்பு 12 மாதங்களில் 34 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் தீ விபத்து காரணமாக கடந்த ஆண்டு முதல் சுவாச நோயால் 2 ஆயிரத்து 195 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காட்டுத்தீயில் இருந்து வரும் புகை, கொரோனா பாதிப்பை மேலும் மோசமடையச் செய்யும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
Comments