ரூ.100 கோடி மதிப்பிலான 18 குவாரி டெண்டர் நடவடிக்கை ரத்து

0 1289
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 18 குவாரி டெண்டர் நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 18 குவாரி டெண்டர் நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்பி செல்லக்குமார் சார்பில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால், ஓபன் டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 18 குவாரி டெண்டர் நடவடிக்கைகள் அறிவிப்பாணை முழுவதையும் ரத்து செய்துள்ளதாக தெரிவித்தார்.

அரசின் விளக்கத்தை பதிவு செய்த நீதிபதிகள், டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை கோரிய மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments