லாரா புயலால் கடும் சேதமடைந்த வளைகுடா கடற்கரையோரம்... தேசிய சூறாவளி மையம் சொன்னது என்ன..?

0 1763
லாரா புயலால் கடும் சேதமடைந்த வளைகுடா கடற்கரையோரம்... தேசிய சூறாவளி மையம் சொன்னது என்ன..?

அமெரிக்காவில் டெக்சாஸ்-லூசியானா வளைகுடா கடற்கரையோரம் லாரா புயல், கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

லூசியானாவின் பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக வீதிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

அண்டை மாநிலமான டெக்சாஸில் 4 லட்சத்துக்கு மேற்பட்டோரும் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வார இறுதியில் டொமினிகன், ஹைதி இடையே லாரா புயல் தாக்கியதில் 24 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments