RS Q 8 SUV மாடல் காரை அறிமுகப்படுத்தியது Audi நிறுவனம்

0 1737
RS Q 8 SUV மாடல் காரை அறிமுகப்படுத்தியது Audi நிறுவனம்

சொகுசு கார் விற்பனையில் முன்னணியில் உள்ள ஆடி நிறுவனம், ஆர்எஸ் கியூ 8 எஸ்யூவி மாடல் காரை விற்பனையக விலையாக 2 கோடியே 7 லட்சம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

பிஎஸ்6 தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் 600 எச்.பி பவர் கொண்ட சக்தி வாய்ந்த என்ஜின் இருப்பதால், வெறும் 4 நொடிகளுக்குள் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது.

4.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட இந்த காரில் அதிகபட்சமாக மணிக்கு 305 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். அதி உயர்ந்த செயல்திறனுடன் உருவாக்கப்பட்டுள்ள ஆர்எஸ் கியூ 8 கார், ஸ்போர்ட்ஸ் மாடல் சொகுசு கார்
பிரியர்களை காந்தம் போல் கவர்ந்து இழுக்கும் என்று நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments