கருப்பினத்தவரை போலீசார் சுட்டதைக் கண்டித்து, வெஸ்டர்ன் அன் சதர்ன் போட்டியில் இருந்து நவோமி ஒசாகா விலகல்

0 1670
கருப்பினத்தவரை போலீசார் சுட்டதைக் கண்டித்து, வெஸ்டர்ன் அன் சதர்ன் போட்டியில் இருந்து நவோமி ஒசாகா விலகல்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் கருப்பினத்தவரை போலீசார் சுட்டதைக் கண்டித்து, வெஸ்டர்ன் அன் சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து நவோமி ஒசாகா விலகினார்.

கெனோஷா நகரில் கருப்பினத்தைச் சேர்ந்தவரின் முதுகில் 7 முறை போலீசார் சுட்டதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நியூயார்க்கில் நாளை நடக்க உள்ள அரையிறுதிப் போட்டியில் இருந்து, இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா விலகி உள்ளார்.

டென்னிஸ் விளையாடுவதை விட கருப்பின பெண்ணாக முக்கியமான விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் ட்விட் செய்துள்ளார். இதனிடையே கெனோஷா நகரில் நீதிமன்றத்துக்கு வெளியே இன மற்றும் நிற வெறிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments