பணியிடங்களில் கொரோனா தொற்று தடுப்பு காண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் - ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர்
பணியிடங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க காண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கியுள்ள நிலையில்,பணியிடங்களில் தொற்று பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் பணியிடங்களில் ஆங்காங்கே கிருமிநாசினி இருப்பதையும், அனைவரும் மாஸ்க் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும், தனி மனித இடைவெளியை கட்டயாம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதே போல் உணவு மற்றும் தேநீர் இடைவேளையின் போது அதிகம் பேர் கூடுவதை தவிர்க்கவும், அறிகுறி உள்ளவர்களை உடனே கண்டறியவும், அவர்கள் பணிக்கு வராமல் இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ள அவர், அதிக அறிகுறி உள்ளவர்களை சோதனைக்கு உட்படுத்தவும், நிறுவனம் சார்பில் கொரோனா கண்காணிப்பு குழு அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
Comments