நீட், JEE தேர்வுகளை தள்ளிவைக்க உச்ச நீதிமன்றத்தை அணுக மாநில முதலமைச்சர்களுக்கு முக.ஸ்டாலின் கடிதம்
JEE தேர்வுகளை தள்ளிவைக்க கோரி 7 மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ள நிலையில் இதர மாநிலங்களும் அதே பாணியில் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அனைத்து முதலமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.
ஜூன் மாதம் நடக்க வேண்டிய இந்த தேர்வுகள் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டாலும், நிலைமை இப்போது மேலும் மோசமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பல மாநிலங்கள் வெள்ளம், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து வசதிகள் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், மாணவர்களால் தேர்வு மையங்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
#NEET எதிர்ப்பு உண்மையெனில் 7 மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்றேன்!
— M.K.Stalin (@mkstalin) August 26, 2020
கடிதம் எழுதி இருக்கிறாராம் @Vijayabaskarofl
சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் இவரின் கடிதத்தையா மதிக்கப் போகிறார்கள்?
ஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்.
Comments