சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.2 லட்சத்திற்கும் மேலான பண பரிவர்த்தனை.... வருமான வரித்துறை முறையாக கண்காணித்து உறுதிபடுத்த உத்தரவு
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் 2 லட்ச ரூபாய்க்கும் மேல் நடைபெறும் பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் நடைபெறுவதை வருமான வரித்துறை முறையாக கண்காணித்து உறுதிப்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், வருமான வரிச் சட்டப் படி, ஒரு நபர் 2 லட்சம் ரூபாய்க்கு மேலாக பண பரிவர்த்தனை மேற்கொண்டால், அவை டிஜிட்டல் அல்லது காசோலை முறையிலேயே நடைபெற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் உள்ள பத்திர பதிவு அலுவலகங்களில் வருமான வரிச் சட்டத்தில் கூறியபடி பணப்பரிவர்த்தனை நடைபெறுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், பதிவுத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த நடைமுறை கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் வழக்கத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த நடைமுறை முறையாக பின்பற்றப்படுகிறதா? என வருமான வரித்துறை கண்காணித்து உறுதிப்படுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Comments