நீட், JEE தேர்வுகளை அறிவித்தபடி நடத்த 150 கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

0 3975
நீட், JEE தேர்வுகளை அறிவித்தபடி நடத்த 150 கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

நீட், JEE தேர்வுகளை இனியும் தாமதப்படுத்தினால், மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது போல ஆகி விடும் என இந்தியா மற்றும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை சேர்ந்த 150 க்கும் அதிகமான கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

கொரோனாவின் பின்னணியில் இந்த தேர்வுகளை அடுத்த மாதம் நடத்துவதற்கு எதிராக பல குரல்கள் எழுந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், அரசியல் லாபத்தை வளர்த்துக் கொள்வதற்காக பலர் மாணவர்களின்  எதிர்கால வாழ்க்கையோடு விளையாட முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களும், மாணவர்களும் நாட்டின் எதிர்காலம் என குறிப்பிட்டுள்ள இந்த கல்வியாளர்கள், கொரோனா காரணமாக அவர்களின் வேலைவாய்ப்புக்களில் நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.எனவே ஏற்கனவே அறிவித்தபடி இந்த தேர்வுகளை மத்திய அரசு வெற்றிகரமாக நடத்தும் என உறுதியாக நம்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments