ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழின் செல்லுபடிக் காலம் நீட்டிக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்
ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் செல்லுபடிக் காலத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதிக்குட்பட்ட காசிபாளையம் பேரூராட்சியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அமையும் வடிகால் வசதியுடன் கூடிய புதிய தார்சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு செங்கோட்டையன் அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
அதன்பின் பேசிய அவரிடம், ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ்களின் செல்லுபடிக் காலம் 7ஆண்டுகள் என்பதிலிருந்து நீட்டிக்கப்படுமா எனச் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.
Comments