பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் முன்பே 47,671 இடங்கள் காலியாக உள்ளன

0 3197
பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் முன்பே 47,671 இடங்கள் காலியாக உள்ளன

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு தொடங்குமுன்பே 47 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இணையவழியில் ஒரு லட்சத்து 60 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 பேர் மட்டுமே சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு கலந்தாய்வின்மூலம் 458 கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 877 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சான்றிதழைப் பதிவேற்றியவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என்பதால், கலந்தாய்வு தொடங்குமுன்பே  47 ஆயிரத்து 671 இடங்கள் காலியாகிவிட்டன.

கடந்த ஆண்டு மொத்தம் இருந்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் இடங்களில் சுமார் 91 ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments