நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு ; குற்றவாளிக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை!
நியூசிலாந்தில் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி 51 பேரை கொன்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரென்ட் டார்ரென்டுக்கு -க்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது-
கடந்த 2019 - ஆம் ஆண்டு மார்ச் - 15 ஆம் தேதி அமைதியான நாடாக அறியப்பட்ட நியூசிலாந்து ரத்தகளமானது. காரணம்... பிரென்டன் டார்ரென்ட் என்ற ஆஸ்திரேலியர். நிற வெறி கொண்ட பிரென்டன் டார்ரென்ட் கிறிஸ்ட் சர்ச் நகரிலுள்ள அல் நூர் மசூதி மற்றும் லின்வுட் இஸ்லாமிய மையங்களில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடத்தினார். இரு மசூதிகளிலும் Brenton Tarrant தாறுமாறாக துப்பாக்கியால் சுட்டதில் 51 பேர் பரிதாபமாக பலியாக , 40 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட Brenton Tarrant சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கு விசாரணை கிறிஸ்ட்சர்ச் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் பிரன்டன் டார்ரன்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாரோலும் வழங்கப்படாது. நியூசிலாந்தில் பரோல் இல்லாமல் வாழ்நாள் சிறைத்தண்டனை பெறும் முதல் நபர் இவர்தான்.
Comments