ஜப்பானில் ஒரே இடத்தில் குவியல், குவியலாக மனித எலும்புக்கூடுகள்
ஜப்பான் நாட்டின் மேற்கு நகரமான ஒசாக்காவில் அகழாய்வு பணியின் போது ஒரே இடத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மனித எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஒசாக்கா நகரில் உள்ள உமேடா கல்லறை ஏழு வரலாற்று சிறப்பு மிக்க கல்லறைகளில் ஒன்றாக நம்பப்படுகிறது. இந்த இடத்தில் 1500-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன.
அங்கு புதைக்கப்பட்ட மக்கள் ஒசாகா கோட்டை நகரத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளாக இருக்கலாம் என்றும், அவர்களின் பல 30 வயதிற்கும் உட்பட்டவர்களாகவோ, குழந்தைகளாகவோ இருக்கலாம் என்றும் ஒசாக்கா நகர கலாச்சார பண்புகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிலர் உடல்களில் கை, கால்களில் நோயின் அறிகுறிகளை கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், கொரோனா போன்ற பெருந்தொற்று பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Comments