கொரோனா நோயாளிகளுக்கு மனவலிமை அளிக்க திரிபுரா அரசு புதிய முயற்சி
கொரோனா நோயாளிகள் மன வலிமையுடன் இருப்பதற்காக, அவர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களை திரிபுரா அரசு வழங்க தொடங்கி இருக்கிறது.
திரிபுராவில் மொத்தம் 9213 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 6574 பேர் குணமடைந்து விட்டனர். 83 பேர் நோய் தொற்றுக்கு பலியாயினர். கொரோனா நோயாளிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த நிலையில், கொரோனா நோயாளிகள் ஊக்கமுடனும், மனவலிமையுடன் இருப்பதற்காக சுவாமி விவேகானந்தர் எழுதிய புத்தங்களை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லப்குமார் தேப் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திரிபுரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அகர்தாலா கோவிட் சென்டருக்கும் சில புத்தகங்களை அவர் வழங்கி இருக்கிறார்.
Strength is life, weakness is death ~ Swami Vivekananda.
— Biplab Kumar Deb (@BjpBiplab) August 25, 2020
To keep the COVID 19 Patients motivated & mentally strong, we have decided to distribute books written on Swami Vivekananda to every COVID patient so that they can read these books and get inspired by his thoughts. pic.twitter.com/j81kTsfHbo
Comments