செல்போன்கள் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரியை மடக்கி 12 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை
ஆந்திரா மாநிலம் நகரியில் செல்போன் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரியை மடக்கி 12 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டப்பட்டள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள எம்.ஐ. செல்போன் தொழிற்சாலையில் இருந்து மும்பைக்கு 12 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி புறப்பட்டது.
இந்த லாரி ஆந்திர மாநிலம் நகரி அருகே சென்றபோது, மற்றொரு லாரியில் வந்த மர்ம நபர்கள் கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி முகவரி கேட்பது போன்று பேசியுள்ளனர்.
அப்போது கண்டெய்னர் லாரியில் ஏறிய மர்ம நபர்கள், ஓட்டுனரை துப்பாக்கி முனையில் மிரட்டி, அடித்து கீழே இறக்கிவிட்டு கண்டெய்னர் லாரியை கடத்திச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து லாரியின் ஓட்டுனர் நகரி போலீசில் புகார் அளித்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரியை கண்டுபிடித்த போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அதிலிருந்த செல்போன்கள் அனைத்தும் திருடு போயிருந்தது தெரியவந்தது. சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொள்ளை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments