"எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம்" எம்ஜிஎம் மருத்துவமனை

0 10757

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக கடந்த 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தொடர் சிகிச்சையை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சுய நினைவுடன் உள்ளதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ குழு மூலம் எஸ்பிபி உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே தனது தந்தையின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நம்பிக்கை தருவதாக எஸ்பிபி சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments