திருமூர்த்தி அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு

0 1463
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு வரும் 28ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கும், தளி வாய்க்கால் பாசனத்துக்கும் வரும் 28ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு ஆகஸ்டு 28 முதல் மொத்தம் 870 கோடி கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோலப் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பழைய ஆயக்கட்டு தளி வாய்க்கால் பாசனத்துக்கு ஆகஸ்டு 28 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments