குட்கா ஊழலில் தொடர்புடையோரை மத்திய,மாநில அரசுகள் காப்பாற்றுவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
குட்கா ஊழலில் தொடர்புடையோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய அரசும் காப்பாற்றுவதாக திமுக த லைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 40 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்ற, 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த குட்கா பேர ஊழலில் தலைமைச் செயலாளரிடம் வருமான வரித்துறை கொடுத்த கோப்புகள் காணாமல் போய்விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குட்கா வழக்கை விசாரித்த அதிகாரிகள் மாற்றப்பட்டதையும், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததையும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை நெருங்க விடாமல் சி.பி.ஐ.யைத் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது? என ஸ்டாலின் வினவியுள்ளார்.
Comments