ஆன்லைன் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விண்ணப்பிக்கும் வசதியை அமைச்சர் தொடங்கி வைத்தார்

0 4608
தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். 

தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்ய மற்றும் புதுப்பிக்க மற்றும் மகப்பேறு, திருமணம், இறப்பு உள்ளிட்டவற்றிற்கு நலத்திட்ட உதவிகள் பெற ஆணையத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அமைச்சர் நிலோபர் கபில் அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த வகையில் தொழிலாளர்கள் இனிமேல் புதிதாக பதிவு செய்வது, பதிவை புதுப்பிப்பது, நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பித்தல், மனுக்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், மாவட்டங்களுக்கு இடையேயான உறுப்பினர் பதிவு ஆகியவற்றை https://labour.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments