பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் விதிகளை வகுத்து அரசாணை வெளியீடு

0 3081
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான விதிமுறைகளை அரசாணையாக தமிழ்நாடு அரசு வெளியீடு

வேளாண்துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில், விளைநிலங்களை நீடித்த வேளாண் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும், வேளாண்மை அல்லாத பயன்பாடு, பிற வளர்ச்சிப் பணிகளால் வேளாண் நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணையம், விளைச்சலை அதிகரிக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட பயிரிடு முறைகள் ஆகியவற்றின் வழியே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மேம்படுத்தலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

வேளாண்மைக்கு நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தலை ஊக்குவிக்கவும், வேளாண்மை சார்ந்த மற்றும் நீடித்த வேளாண் வளர்ச்சிக்கான துணைத் தொழில்களை ஊக்குவிக்கவும் செய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

வேளாண்மை, துணைத் தொழில்களில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. இதை உடனடியாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடத் தமிழ் வளர்ச்சித் துறை, அரசு மைய அச்சகம், எழுதுபொருள் அச்சிடல் இயக்குநர் ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments