ஏர் இந்தியா பங்குகளை வாங்க விருப்பம் தெரிவிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 30 வரை நீட்டிப்பு
ஏர் இந்தியா நிறுவனத்தை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவிப்பதற்கான காலக்கெடு நான்காம் முறையாக அக்டோபர் 30ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் மூழ்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகள் முழுவதையும் விற்க முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பங்குகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள் மார்ச் முப்பதாம் தேதிக்குள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம் என ஜனவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தக் காலக்கெடு ஏப்ரல் 30, ஜூன் 30, ஆகஸ்டு 30 என மூன்று முறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நான்காம் முறையாக அக்டோபர் முப்பதாம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா சூழலைக் காரணம் காட்டி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையின்படி காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக முதலீடு மட்டும் பொதுச் சொத்துக்கள் மேலாண்மைக்கான துறை தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா பங்குகளை வாங்க விருப்பம் தெரிவிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 30 வரை நீட்டிப்பு | #AirIndia https://t.co/VnprEoPVr4
— Polimer News (@polimernews) August 26, 2020
Comments