சிரியாவில் கைதான ஐஎஸ் தீவிரவாதிகளில் பாகிஸ்தானியர்கள்: அமெ.விசாரணையால் பாக்.கிற்கு பின்னடைவு
சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் கூட்டத்தில் பாகிஸ்தானியர்களும் இருப்பது குறித்து அமெரிக்க நடத்தும் விசாரணை, பிரதமர் இம்ரான்கானுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது உறுதியாகி உள்ளது.
அமெரிக்க ஆதரவு சிரிய குர்து ஜனநாயக படையினர் பிடித்து வைத்துள்ள ஐஎஸ் தீவிரவாதிகளில் 29 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அல் கொய்தா அல்லது பாகிஸ்தானில் இயங்கும் வேறு அடிப்படைவாத குழுக்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் அமெரிக்கா விசாரணை நடத்துகிறது.
இந்தியாவை குறிவைத்து லஷ்கரே தொய்பா, ஜெய்ஷே முகம்மது ஆகிய தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இருந்து இயங்குவதால், பாகிஸ்தான் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது என்ற இந்தியாவின் வாதமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாம் சேர்த்து தீவிரவாத செயல்களுக்கு பணம் போவதை தடுக்கும் FATF அமைப்பின் சந்தேக பட்டியலில் இருந்து வெளியேற முயற்சிக்கும் பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
Comments