நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,059 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு ஆயிரத்து 59 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 32 லட்சத்து 34 ஆயிரத்து 475ஆகவும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 449ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 7 லட்சத்து 7 ஆயிரத்து 267 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 24 லட்சத்து 67 ஆயிரத்து 759 பேர் மருத்துவ சிகிச்சையில் குணமாகியுள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 8 லட்சத்து 23 ஆயிரத்து 992 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து நாட்டில் இதுவரை நடைபெற்ற கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை 3 கோடியே 76 லட்சத்தை தாண்டியுள்ளது.
Comments