கால்வன் மோதல் சம்பவம் துரதிருஷ்டவசமானது என சீன தூதர் வருத்தம்

0 7110

கால்வன் பள்ளத்தாக்கு மோதல் சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும், இருநாட்டு வரலாற்றில் இதுவொரு சின்ன நிகழ்வுதான் என்றும் இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங் (Sun Weidong ) வருத்தம் தெரிவிக்கும் தொனியில் பேசியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்திய- சீனா இளைஞர்கள் காணொலி கருத்தரங்கில் நிகழ்ச்சியில் பேசிய அவர், எல்லை பகுதிகளில் நேரிட்ட பதற்றத்தை சரி செய்யும் முயற்சியில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

இந்தியாவை எதிரியாகவோ அச்சுறுத்தலாகவோ சீனா பார்க்கவில்லை என்றும், கூட்டாளியாகவே கருதுகிறது என்றும் வெய்டாங் கூறினார். இந்தியாவும் சீனாவும், அமைதியான உறவை பேண வேண்டும், மோதல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கால்வன் மோதல் சம்பவத்தால் இருநாடுகளிடையே பதற்றம் நிலவும் நிலையில் வெய்டாங்கின் கருத்து முக்கியமானதாக கருதபடுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments