லடாக் எல்லையில் மூன்றாவது சாலையை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க தீவிரம்
லடாக் எல்லையில் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதால் வீரர்கள் பனிமலைகளுக்கு இடையில் சுதந்திரமாக நடமாட இயலும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லடாக்கின் எல்லை வரை செல்லும் மூன்றாவது சாலை இன்னும் இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட்டு விடும் என்றும், இதில் நான்கரை கிலோமீட்டர் சுரங்கப் பாதையாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சியாச்சின் பனிமலையின் மீது சீனா ஒரு கண் வைத்திருக்கும் நிலையில், அனைத்து தட்பவெப்ப நிலையிலும் பயன்படுத்த ஏதுவாக மூன்றாவது சாலை மிகவும் அவசியம் என்று ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். எல்லையின் அடர்த்தியான பகுதிகளுக்குப் படைகளை நகர்த்துவதற்காக இந்த சாலைகள் திட்டத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
Comments