19,000 பணியாளர்களை வேலைநீக்கம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் முடிவு
கொரோனா பரவலால் விமானப் போக்குவரத்து நலிவடைந்ததால் 19 ஆயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நலிவடைந்த விமான நிறுவனங்களுக்கு 25 பில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்க அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தபோதும், மேலும் 25 பில்லியன் டாலர்கள் வழங்கவேண்டுமென விமான நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் விமான நிறுவனங்களின் பங்கு சரிவடைந்ததால் நிலைமை மேலும் மோசமானது. இதனால் தற்போதைய நிலையில் 50 விழுக்காட்டுக்கும் குறைவான அளவே விமானப் பயணங்களை திட்டமிட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே பணியாளர்களை வேலைநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
American Airlines said that unless federal aid is extended, its workforce will shrink by 40,000 in October, including 19,000 involuntary cuts https://t.co/l81v7xTrg0 pic.twitter.com/Xu0rDl4akn
— Reuters (@Reuters) August 26, 2020
Comments