2019-2020ஆம் ஆண்டில் ஒரே ஒரு 2000 ரூபாய் தாள் கூட அச்சிடப்படவில்லை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்
2019 - 2020 ஆம் நிதி ஆண்டில் ஒரே ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கூட அச்சிடப்படவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2016 - 2017 ஆம் ஆண்டில் 350 கோடி எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன.
பின்னர் படிப்படியாக அதன் புழக்கம் குறைந்து, கடந்த 3 ஆண்டுகளில் மொத்த ரூபாய் நோட்டுகளில் 2 ஆயிரம் தாளின் பங்களிப்பு 50 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைந்துள்ளது.
2019 - 2020ல் அதிகபட்சமாக 17 கோடியே 68 லட்சம் எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ புழக்கத்தில் இருந்து அகற்றி உள்ளது.
அதே ஆண்டில் மொத்தம் அச்சிடப்பட்ட 2200 கோடி எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமானவை 500 ரூபாய் நோட்டுகள் ஆகும்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்படாது என்று கடந்த மார்ச் மாதம் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் மக்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments