சீனா அத்துமீறினால் அதிரடிக்கு இந்தியா ரெடி..!

0 11507
லடாக்கில் இந்திய எல்லையையொட்டி, சீனாவின் ஹெலிகாப்டர்கள் அத்துமீறி பறந்ததால், ஏவுகணை தாக்குதல் தடுப்பு அமைப்புகளோடு, உடனடியாக, துருப்புகளை இந்திய ராணுவம் குவித்துள்ளது.

லடாக்கில் இந்திய எல்லையையொட்டி, சீனாவின் ஹெலிகாப்டர்கள் அத்துமீறி பறந்ததால், ஏவுகணை தாக்குதல் தடுப்பு அமைப்புகளோடு, உடனடியாக, துருப்புகளை இந்திய ராணுவம் குவித்துள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் இந்தியா - சீனா ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

சில குறிப்பிட்ட இடங்களில் படைகளை விலக்க சீனா மறுத்து வருவதுடன், சமீப நாட்களில் சாலைகள் அமைப்பது, கூடுதல் வீரர்களை பணிகளில் ஈடுபடுத்துவது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் கிழக்கு லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய எல்லைக்குள் சீன ஹெலிகாப்டர்கள் அத்துமீற முயன்றுள்ளன. இது பற்றி அறிந்ததும் இந்திய வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

தோளில் வைத்து ஏவுகணைகளை செலுத்தும் கருவிகளுடன் இந்திய வீரர்கள் எல்லை அருகாமையில் உயரமான இடங்களில் களமிறக்கப்பட்டுள்ளனர். ரஷ்ய நாட்டின் தயாரிப்பான இக்லா என்ற ஏவுகணை ஏவும் கருவியுடன் அவர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படையில் இக்லா கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் எதிரி நாட்டு ஹெலிகாப்டர், விமானங்கள் அத்துமீறி நெருங்கினால் தாக்குதல் நடத்தி அழிக்க முடியும். அதுமட்டுமின்றி ரேடார் கருவிகள், தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் போன்றவற்றையும் நிறுவி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய விமானப்படையின் சுகாய் 30 எம்கேஐ என்ற போர் விமானம் மே மாதம் முதல் வாரத்திலேயே தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சீனா அத்துமீறாமல் இருப்பதற்காக, ஹோடன், கர்குன்சா, கஷ்கர், லின்சி உள்ளிட்ட இடங்களில் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments