மொரீசியஸ் கடற்கரையோரம் விபத்துக்குள்ளாகி சிக்கி நிற்கும் கப்பலால் கடல் சூழல் மேலும் மோசடையும் நிலை - மீட்புக் குழு
மொரீசியஸ் கடற்கரையோரம் எண்ணெய் கசடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பான் பேரிடர் மீட்பு குழுவினர், விபத்துக்குள்ளாகி சிக்கி நிற்கும் கப்பல் மற்றும் எண்ணெய் மாசு காரணமாக கடல் சூழல் மேலும் மோசமடையக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 25 ஆம் தேதி மொரீஷியஸின் தென்கிழக்கு கடற்கரையோரம் பவளப்பாறையில் மிட்சுய் ஓ.எஸ்.கே. நிறுவனத்தின் கப்பல் மோதியதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது.
இது தொடர்பான 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எண்ணெய் கசிவால் சதுப்பு நிலங்களோ, பவளப்பாறைகளோ பாதிக்கப்பட வில்லை என்று ஜப்பான் பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிட்சுய் ஓ.எஸ்.கே. நிறுவனத்தை முற்றுகையிட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments