திருப்பதி ஏழுமலையான் கோவில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
பழமை வாய்ந்த கோவில்களை புனரமைப்பது, தூப தீப நைவேத்தியம் சமர்ப்பிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த அறக்கட்டளை நிதி பயன்படுத்தப்படுகிறது.
இந்த அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர் ஒருவருக்கு வி.ஐ.பி. தரிசனத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.
அவ்வாறு செப்டம்பர் மாதத்திற்கு ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் சுமார் 100 டிக்கெட் வரை தினந்தோறும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அதேபோல் பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்ய இருப்பதாகவும் நன்கொடை அளித்த பக்தர்கள் ஓராண்டில் எப்போது வேண்டுமானாலும் ஒருமுறை வி.ஐ.பி. தரிசனம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments