காய்கறி மூட்டையில் கஞ்சா-கம்பி எண்ணும் 13 பேர்
சென்னையில் ஊரடங்கின் போது கல்லூரி மாணவர்கள், படிப்பை முடித்த மாணவர்கள் மூலம் ஆந்திராவில் இருந்து காய்கறி மூட்டைகளோடு சேர்த்து கஞ்சா கடத்தி சப்ளை செய்து வந்த 13 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் இரு தினங்களுக்கு முன்பு தனியார் தங்கும் விடுதி ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் 18 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவை சேர்ந்த ஐசக் என்பவன் மொத்தமாக கஞ்சாவை கடத்தி வந்து சென்னை கல்லூரி மாணவர்களை வைத்து சப்ளை செய்தது அம்பலமானது. அதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் நடத்திய வேட்டையில் இதுவரை 13 பேர் சிக்கியுள்ளனர். இதில் ஆந்திராவை சேர்ந்த கஞ்சா கடத்தல் கும்பல் தலைவனான ஐசக் என்பவன் குறித்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த டிசம்பரில் புதுச்சேரியில் நடந்த பார்ட்டி ஒன்றில் வைத்து, இப்போது செய்யப்பட்டுள்ள முன்னாள் கல்லூரி மாணவர்களான ஹரிபாபு, பிரித்விராஜ் ஆகியோருக்கு ஐசக்கின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, கஞ்சா கடத்தி விற்றால் கிடைக்கும் வருமானம் குறித்து ஆசை வார்த்தை கூறி அந்த பார்ட்டிக்கு தங்களது தோழிகளுடன் வந்த நணபர்களான முன்னாள்-இந்நாள் மாணவர்கள் 10 பேரையும் மூளைச் சலவை செய்துள்ளனர்.
ஹரிபாபுவிற்கு கோயம்பேடு சந்தையில் இருக்கும் தொடர்புகளை பயன்படுத்தி, காய்கறி மூட்டைகளில் கஞ்சாவை கடத்தும் திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பலருக்கு ஏற்கனவே கஞ்சா பழக்கம் இருந்த்ததாலும், ஊரடங்கு நாளில் சென்னையில் மது கடைகள் மூடப்பட்டிருந்ததாலும், கஞ்சா சப்ளையை பரவலாக்கியுள்ளனர். ஆந்திராவை சேர்ந்த ஐசக் அங்கிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி காய்கறி ஏற்றி வரும் சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்னைக்கு கொண்டு வந்துள்ளான்.
வாட்ஸப் குழு அமைத்து கஞ்சா தேவைப்படும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கிராம் 100 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்துள்ளனர். ஐசக் 1 கிலோவுக்கு 8 ஆயிரம் ரூபாய் கமிஷன் வாங்கி கொண்டு கஞ்சாவை விற்பனை செய்துள்ளான். குறிப்பாக குடும்ப வறுமையில் உள்ள மாணவர்களிடம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்துள்ளது.
Comments