பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி...
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்புதல் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடக் கோரி 8 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பத்தாம் வகுப்பு தேர்வில் அனைவரும் வெற்றி என அறிவிக்கப்பட்டு, மதிப்பெண்கள் கணக்கிட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டதாகவும், தற்போதைய நிலையில் நீதிமன்றம் தலையிட்டால், அது மாணவர்களின் மேல்நிலை படிப்புகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கொரோனா காலத்தில் மாணவர்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Comments